Wednesday 13 March 2013

மாங்காய் இன்ஜி:

                                                        மாங்காய் இன்ஜி:
                                             
                                            
                       மாங்காய் இன்ஜி:

தேவையானவை:

மாங்காய் இன்ஜி,எலுமிச்சம் பழம்,உப்பு,பச்சை மிளகாய்.

செய்முறை:

மாங்காய் இன்ஜீயை தோல் சீவி பொடிபொடியாக கட் செய்யவும். பின் அதில் கட் செய்த மிளகாய் போட்டு சிறிது எலுமிச்சம் பழ சாரு பிழிந்து உப்பு போடவும்.நன்கு கலக்கவும் . தேவையானால் கடுகு தாளிக்கவும்.

இதை தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்             

Thursday 7 March 2013

சுண்டைக்காய் வற்றல் குழம்பு:

சுண்டைக்காய் வற்றல் குழம்பு:




பொருட்கள்:-

 புளி -பெரிய எலுமிச்சம்பழ அளவு
பெருங்காயம் -1/2 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
வெந்தயம் : 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சாம்பார் பொடி : 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சுண்டைக்காய் வற்றல் - தேவையான அளவு.


செய்முறை:-

முதலில் புளியை  ஊற வைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பெருங்காயத்தைப் பொறித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சுண்டைக்காய் வற்றலை வறுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடுகை வெடிக்க விட்டு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகாய்த் துண்டுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஒவ்வொன்றாக நன்கு வறுக்க வேண்டும். லேசாகப் பொன் நிறம் வந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு மேலும் வறுக்கவும்.
இப்பொழுது கரைத்த புளித் தண்ணீரை அதில் விடவும். வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். பெருங்காயத்தைச் சேர்த்து 6 கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

Monday 4 March 2013

பட்டாணி மசாலா சாதம்:

                                       பட்டாணி மசாலா சாதம்: 










தேவையானவை:

பச்சரிசி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, மஞ்சள் தூள் - 1/4 கப், உப்பு, பட்டாணி - 1/4 கப்.

அரைய்க்க:

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு - 1/2 டீஸ்பூன்...
தாளிக்க:
கருவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். 
 செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்குங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக அரைக்கவும். எண்ணெய் காய வைத்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின் சிறிது உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பிறகு தக்காளி , மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்

முப்பருப்பு வடை :


                                                    முப்பருப்பு  வடை :



                                 

தேவையானவை:

துவரம் பருப்பு,கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1/4 கப், வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் -; 5, தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை  - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


  மூன்று வித பருப்பையும் ஒன்றாக சேர்த்து 1/2 மணி ஊறவைக்கவும். ஊறியதும் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் வெண்ணெய், கருவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து வடைகளாக பொரித்து எடுக்கவும்.

                                                            சம்பார புளி


                                         

தேவையானவை:
  
 கொத்தமல்லி - 1 பெரியகட்டு, புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - 1 ஸ்பூன்,  வற்றல் மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:

        கொத்தமல்லியை வேர் நீக்கி சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் நன்கு அலசி, நீரை நன்றாக, துளி கூட இல்லாமல் வடிய விட வேண்டும். உரலை ஈரமில்லாமல் துடைத்துக்கொண்டு வறுத்து கொட்டி நன்கு இடிக்கவேண்டும்,. நன்கு பொடியானவுடன்,  புளி,  உப்பு சேர்த்து மேலும் இடித்து, கொத்தமல்லி சேர்த்து நன்கு இடிக்கவேண்டும். இதற்க்கு தண்ணீர் சேர்க்க கூடாது .
                                                                எள் உருண்டை

                                




தேவையானவை:

எள் - 1 கப்
வெல்லம் -  ஒரு கப்.

செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து இடித்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.



காரடையான் நோன்பு கொழுக்கட்டை





காரடையான் நோன்பு கொழுக்கட்டை


அரிசி - 2 கப்
வெல்லத்தூள் - முக்கால் கப்
கருப்பு காராமணி  - ஒரு ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் -  2 ஸ்பூன்
ஏலக்காய்தூள் - ஒரு ஸ்பூன்.

செய்முறை: 

அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடியவிட்டு நிழலில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, சலித்துக்கொள்ளவும்.  காராமணியை வறுத்து, ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மாவைப் போட்டு, நிதானமான தீயில் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு, அந்த மாவை தனியே எடுத்துவைத்து விட்டு, அதே கடாயில் சிறிது நீர்விட்டு, வெல்லத்தைப் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். பிறகு, அந்தக் கரைசலை அடுப்பில் வைத்து, தீயைக் குறைத்து, மாவை சிறிது சிறிதாகத் தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதில், ஏலக்காய்தூள், தேங்காய் துண்டுகள், காராமணி சேர்த்துக் கிளறவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆறியவுடன் கட்டியில்லாமல் பிசைந்து, நீள வடிவத்தில், சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வேகவையுங்கள். இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.