Monday 4 March 2013

காரடையான் நோன்பு கொழுக்கட்டை





காரடையான் நோன்பு கொழுக்கட்டை


அரிசி - 2 கப்
வெல்லத்தூள் - முக்கால் கப்
கருப்பு காராமணி  - ஒரு ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் -  2 ஸ்பூன்
ஏலக்காய்தூள் - ஒரு ஸ்பூன்.

செய்முறை: 

அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடியவிட்டு நிழலில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, சலித்துக்கொள்ளவும்.  காராமணியை வறுத்து, ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மாவைப் போட்டு, நிதானமான தீயில் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு, அந்த மாவை தனியே எடுத்துவைத்து விட்டு, அதே கடாயில் சிறிது நீர்விட்டு, வெல்லத்தைப் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். பிறகு, அந்தக் கரைசலை அடுப்பில் வைத்து, தீயைக் குறைத்து, மாவை சிறிது சிறிதாகத் தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதில், ஏலக்காய்தூள், தேங்காய் துண்டுகள், காராமணி சேர்த்துக் கிளறவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆறியவுடன் கட்டியில்லாமல் பிசைந்து, நீள வடிவத்தில், சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வேகவையுங்கள். இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment